புத்தம் புது கூட்டணி- கவின், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், சூப்பர் அப்டேட் இதோ!

photo

இளம் நடிகராக வலம் வரும் கவின் தனது அடுத்த படத்திற்கு புத்தம் புது கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

photo

லிஃப்ட், டாடா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்து  வளர்ந்து வரும் நடிகராக மாறியுள்ள கவின் தற்போது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி கவினி 6வது படத்தை நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்க உள்ளாராம். படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். குறிப்பாக எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.


ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்பை கிளப்பியுள்ள இந்த படத்தை நெல்சன் தயாரிக்க உள்ளார். அனிரூத் இசையமைக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கிவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்  வெளியாகியுள்ளது.

Share this story