கவினுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்...!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி , பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் கவின் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வெற்றி அடைந்து வருகிறார். வெற்றிமாறன் கூட்டணியில் நடிகர் கவின் நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவருக்கும் புகைப்படம் ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இதனிடையே, கவினை விடவும் வயதில் மூத்த நடிகையான நயன்தாராவுடன் ஜோடி சேர்வது குறித்து சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் படத்தின் கதைக்களமே ஹீரோ தன்னை விட வயதில் மூத்த ஹீரோயினை விரும்புவது தான் என கூறப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா அதே காரணத்துக்காக தான் இப்படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.