1மில்லியன் பார்வையாளர்களை கடந்த கவினின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ பாடல்.
1702447707485

கவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஸ்டார்’ படத்தின் முதல் பாடலான ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் கவின் ‘லிஃப்ட்’ படத்தின் மூலமாக ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அவர் நடித்த டாடா படம் நல்ல ரீச்சை பெற்று தந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் இளன் உடன் கூட்டணி அமைத்து ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் இணைந்து பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ பாடல் நேற்று சூப்பர் ஸ்டார் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில் 24 மணிநேரத்திற்கு முன்பாகவே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதித்துள்ளது.