அட இந்த சேதி தெரியுமா!.....- கவினின் வருங்கால மனைவி லாஸ்ஸியாவின் தோழியாம்!

சின்னத்திரை சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து பிரபலமான நடிகர் கவின். என்னதான் இவர் பிரபலமாக இருந்தாலும் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்தது ‘பிக்பாஸ் நிகழ்ச்சி’ தான். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்துகொண்ட லாஸ்லியாவை காதலித்து கூறி சர்ச்சையில் சிக்கினார். இருவரும் நிகழ்ச்சியில் ஜோடிபோட்டு வலம்வந்ததை பார்த்து வெளியில் வந்ததும் டும் டும் டும் தான் என பலரும் பேசிக்கொண்டனர். ஆனால் நடந்தது என்னமோ வேறு வெளியில் வந்ததும் நீ யாரோ நான் யாரோ என்பது போல இருவரும் அவர் அவரது வேலையை கவனிக்க சென்று விட்டனர்.
தொடர்ந்து லாஸ்ஸியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அதனால் லாஸ்ஸியா மாடலாக மாறி விதவிதாமான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கவின் லிஃப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைனந்தார். இந்த நிலையில் கவினுக்கும் அவரது நீண்டநாள் காதலி மோனிகா டேவிட் என்பவருக்கும் வரும் 20ஆம் தேதி திருமணம் என்ற செய்தி பரவியது.
தொடர்ந்து யார் இந்த மோனிகா என ஆராய தொடங்கினார்கள் நெட்டிசங்கள் அதன் விளைவாக கதையில் ட்விஸ்ட் தரும் விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது மோனிகா, லாஸ்ஸியாவின் தோழியாம். அதுமட்டுமல்லாமல் அவர்தான் லாஸ்ஸியாவின் ஸ்டைலிஸ்டாம். தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.