கவின் 'டாடா'-வை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு !

dada

 கவினின் 'டாடா' படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

dada

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின், 'லிப்ட்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். இதையடுத்து 'டாடா' மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாடா'. 

dada

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

dada

இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக கவின் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

Share this story