டிசம்பர் வெளியீட்டு தயாரான ‘டாடா’.. கவின் படத்தின் அசத்தலான அப்டேட் !

dada
 கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் கவின். அந்த வகையில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டாடா'.  இந்த ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

dada

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story