கவினின் இமேஜை மாற்றியதா ‘டாடா’ ?... வசூலை குவிப்பதால் உற்சாகம் !

dada

 கவினின் ‘டாடா’ திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கவின். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று சிறப்பாக விளையாடி அனைவரையும் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘லிப்ட்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஊர்க்குருவி, டாடா’ ஆகிய படங்களில் நடித்தார். 

dada

அதில் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ‘டாடா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாகவும்,  மலையாள நடிகை அபர்ணா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

dada

ஒரு காதல் ஜோடியாக திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாய் வாழ்கின்றனர். இதனால் அந்த பெண் கர்ப்பமாக திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் ஒத்துக்காததால் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. பின்னர் கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட குழந்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு மனைவி சென்றுவிடுகிறார். இதையடுத்து அந்த குழந்தை எப்படி தனி ஆளாக கதாநாயகன் வளர்க்கிறார் என்பதுதான் கதை. இந்த கதையை மிக சுவாரஸ்சியமாக தற்காலத்திற்கு ஏற்றாற்போல் இயக்குனர் கூறியுளளார். 

இயல்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளிலேயே இரண்டு கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் இந்த படம் 5 நாட்களில் 5 கோடி மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படம் கவினை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

 

 

Share this story