சாதனை படைத்துள்ள கவினின் ‘டாடா’... 50 வது நாளை கொண்டாடும் படக்குழுவினர் !

dada

கவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற ‘டாடா’ திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளது. 

அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ‘டாடா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாகவும்,  மலையாள நடிகை அபர்ணா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

dada

ஒரு காதல் ஜோடியாக திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாய் வாழ்கின்றனர். இதனால் அந்த பெண் கர்ப்பமாக திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் ஒத்துக்காததால் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. பின்னர் கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட குழந்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு மனைவி சென்றுவிடுகிறார். இதையடுத்து அந்த குழந்தை எப்படி தனி ஆளாக கதாநாயகன் வளர்க்கிறார் என்பதுதான் கதை. இந்த கதையை மிக சுவாரஸ்சியமாக தற்காலத்திற்கு ஏற்றாற்போல் இயக்குனர் கூறியுள்ளார். 

இயல்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளிலேயே இரண்டு கோடி ரூபாய் வசூலித்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story