கவின் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை வெளியீடு
1739107901075

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்து வரும் படத்தின் பெயர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'டாடா’ , ஸ்டார், ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவர் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை படக்குழுவை சேர்ந்த அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிலையில், இப்படத்தின் பெயர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.