இதயம் முரளி படத்தில் நடித்தது பற்றி கயாடு லோஹர் என்ன சொல்கிறார் தெரியுமா ?
டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், பஹத் பாசில், மாளவிகா மோகனன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘இதயம் முரளி’. தமன் இசை அமைத்து நடித்தார். இப்படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற கயாடு லோஹர் முதல்முறை தமிழில் பேசினார்.
அது வருமாறு:
நான் கையெழுத்திட்ட முதல் தமிழ் படம் ‘இதயம் முரளி’ என்பதால், இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று சொல்வேன். ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அன்பு மற்றும் பாராட்டுகள் மிகப்பெரியது. இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அமுதா கேரக்டர் என் மனதுக்கு மிகவும் நெருக்கம். அவளின் இன்னசென்ட், தைரி யம், எமோஷன் எல்லாமே எனக்கு நன்கு பிடிக்கும். ஆகாஷ் பாஸ்கரன் என்னிடம் கதை சொல்லும்போது, பிரீத்தி முகுந்தன் கேரக்டரிலும் என்னையே நடிக்க சொன்னார். அதுபோல், பீரீத்தி முகுந்தனும் நான் நடித்த அமுதா கேரக்டருக்கு லுக் டெஸ்ட்டை செய்தார்.

