மேடையில் ‘கயல் ஆனந்தி’ வெளியிட்ட சர்ப்ரைஸ்…. -'யூகி' பட இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தார்.

photo

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ‘ஆனந்தி’, தமிழில் நடிப்பதற்கு முன்பே பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திதந்தது பிரபு சாலமன் இயக்கிய கயல் படம்தான். அன்றிலிருந்து ‘கயல் ஆனந்தி’ ஆனார்.

photo

இந்த நிலையில் தற்பொழுது அவர்யூகிபடத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில்குக் வித் கோமாளிபவித்ரா லக்ஷ்மி, நடிகை ஆத்மியா, வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்

photo

இந்த நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. அந்த விழாவில் கலந்துக்கொண்டு படத்தின் நாயகி கயல் ஆனந்தி பேசியுள்ளார். அதாவது   'இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏனென்றால் இதில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்' என கூறி ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்

photo

இவர் சாக்ரடீஸ் என்ற இணை இயக்குநரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார், வளைகாப்பு நடைபெற போகிறது என பல தகவல்கள் கடந்த வருடமே வெளியானது, ஆனால் அதை உறுதி செய்யும் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

photo

இந்த நலையில்  தற்போது அவரே மேடையில் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை உறுதி செய்திருப்பது பலருக்கும் சர்ப்ரைஸாக அனைந்துள்ளது.

Share this story