நயன்தாரா படத்தில் இணைந்த ‘கயல்’ சீரியல் நடிகை.

photo

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘கயல்’ முன்னணி தொடராக இருக்கும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில் தேவி கதாப்பாத்திரத்தில் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை பெற்றவர் ஐஸ்வர்யா ரவிசந்திரன். இவர் தற்போது வெள்ளித்திரைக்கு செல்கிறார்.

photo

நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ரவிசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஐஸ்வர்யா, படப்பூஜையின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.

photo

மண்ணாங்கட்டி படத்தை பிரபல யூடியூபர் டூட் விக்கி எழுதி இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர், ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்கிறார்.

Share this story