‘அவ கண்ண பாத்தா’.. அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ லிரிக்கல் வீடியோ பாடல் வெளியீடு !

KazhuvethiMoorkan

 அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் லிரிக்கல் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

‘ராட்சசி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. 

KazhuvethiMoorkkan

ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அருள்நிதி மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ள இப்படத்தில் ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

KazhuvethiMoorkkan

டி இமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து ‘அவ கண்ணா பாத்தா’ என்ற லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கிராமத்து காதல் குறித்து பேசுகிறது. இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story