ஓடிடியில் வெளியாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

KazhuvethiMoorkan

அருள்நிதி நடிப்பில் உருவாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகராக அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்கில் வெளியிட்டது. 

KazhuvethiMoorkan

இப்படத்தில் ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது.

கடந்த மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூன் 23-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story