அருள்நிதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

KazhuvethiMoorkan

 அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை பிரபல நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அருள்நிதி மிரட்டலாக நடித்துள்ளார். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முறுக்கு மீசையுடன் கிராமத்து கதைக்களத்தில் அருள்நிதி இந்த படத்தில் நடித்துள்ளார். 

KazhuvethiMoorkan

ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் மே 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது. 

 

Share this story