அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்ட கீர்த்தி பாண்டியன்

அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்ட கீர்த்தி பாண்டியன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அசோக் செல்வனுக்கும், நடிகை  கீர்த்தி பாண்டியனுக்கும், கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், திரைப் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்ட கீர்த்தி பாண்டியன்

இந்நிலையில், புதுமணத் தம்பதிகள் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கீர்த்தி பாண்டியன், திருமணத்தின்போது, மூன்று முடிச்சுகளும் நீயே போட வேண்டும் என அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்டதாக தெரிவித்துள்ளார். இதனியை, திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை அசோக் மற்றும் கீர்த்தி பாண்யிடன் தம்பதி தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 

Share this story