அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் - கீர்த்தி பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக் ஆன 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கீர்த்தியின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த டிசம்பரில் வௌியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்தனர்.
இந்நிலையில், தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் நடைபயணம் நடைபெற்றது. அதை தொடங்கி வைத்த கீர்த்தி பாண்டியன், பெண்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும், அதற்கு எதிராக நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.