“ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்” பிறந்தநாள் வாழ்த்து கூறிய ‘கீர்த்தி பாண்டியன்’.

கீர்த்தி

சமீபத்தில் திருமணம் முடிந்து புது மாப்பிள்ளையாக  வலம்வரும் அசோக் செல்வன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு கீர்த்தி பாண்டியன் கியூட் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

வ்

காதலித்து  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கும் கவிதைப்போல அழகான திருமணம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் அசோக் செல்வனுக்கு அவரது மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் அழகிய வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட், என் வாழ்வில் நடந்த மிகப்பெரிய விஷயம் நீதான். உன்மனதிற்கு பெரியதாக எல்லம் நடக்கும், உன்னை நான் நேசிக்கிறேன்’ என பதிவிட்டு அதனுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Share this story