திருமண வதந்தி... நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம், ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா, தொடரி, சண்டக்கோழி 2, சர்கார், பைரவா, சாணிக் காயிதம், மாமன்னன், சைரன் எனப் பல படங்களில் நடித்துள்ளர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நண்பரை திருமணம் செய்ய போகிறார் போன்ற வதந்திகள் வலம் வந்துகொண்டு இருந்தது.
இந்நிலையில் இவர் தன் மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர், பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை தலையிட்டு, என் குடும்பத்தார் குறித்து நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி பேசுவதை நான் இரண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன். நடிகர் விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம், ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.