கீர்த்தி சுரேஷ் கைவசம் எத்தனை படங்கள் இருக்கிறது தெரியுமா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து 41 மணி நேரம் தூங்காமல், அடுத்தடுத்து வெவ்வேறு திரைப்படப் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வேலை பார்த்ததாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘‘ஒரு படப்பிடிப்பில் இருந்து மற்றொரு படப்பிடிப்பிற்குத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்ததால், நேற்று இந்தத் தகவலைப் பகிரக்கூட என்னிடம் போதிய ஆற்றல் இல்லை.
இறுதியாக நான் தூங்குவதற்கு முன்பு தொடர்ந்து 41 மணி நேரம் விழித்திருந்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு நாள் முன்பாக, ‘‘நேற்று காலை 6 மணிக்கு அறையை விட்டு வெளியேறினேன், இப்போது மீண்டும் அடுத்த நாள் காலை 6 மணி ஆகிறது. கிட்டத்தட்ட 24 மணி நேரமாகத் தொடர்ந்து வேலையில் இருக்கிறேன்.
இதில் உள்ள டிவிஸ்ட் என்னவென்றால், இன்னும் ஒரு மணி நேரத்தில் என்னுடைய அடுத்த வேலைக்காக நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்’’ என்று கூறியுள்ளார். தமிழில் ‘சத்தியவான் சாவித்திரி’, ‘அக்கா’, டோரதி, ெதலுங்கில் ‘ரவுடி ஜனார்த்தனா’, இந்தியில் ‘ரஃப்தார்’ படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

