பெண் தாதாவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் -உடன் நடிப்பது யார் தெரியுமா ?

keerthi

தமிழ் படவுலகை சேர்ந்த கீர்த்தி சுரேஷ், இந்தியை சேர்ந்த ராதிகா ஆப்தே இணைந்து ‘அக்கா’ என்ற வெப்தொடரில் நடித்துள்ளனர். ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இதை தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் படமாக்கப்பட்டுள்ள இதில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 2023ல் இத்தொடர் குறித்து அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொடர் தயாரிப்பில் இருந்து வந்தது. தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
கடந்த 1980களில் பெர்னூர் என்ற கற்பனை ஊரில் நடக்கும் கதையாகவும், பெண் ஆதிக்க சமூகத்தை மையப்படுத்தியும் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் பாரம்பரிய நகைகள் மற்றும் புடவையுடன் பெண் தாதாவாகவும், ராதிகா ஆப்தே அவருக்கு சவால் விடும் ஒரு தீவிரமான கதாபாத்திரத்திலும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி அளிக்கின்றனர்.

Share this story