நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது -கீர்த்தி சுரேஷ் நடித்த படம்

keerthi

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ரஜினி முருகன் ,சாமி 2,அண்ணாத்த ,தானா சேர்ந்த கூட்டம் ,தொடரி ,சண்டக்கோழி 2 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் .

நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.மேலும், தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்த .தனை தொடர்ந்து, 'ரிவால்வர் ரீட்டா' என்ற படத்திலும், அக்கா என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்கு வசந்த் மரியங்கண்டி கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் சுகாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது 
இப்படத்தை சசி இயக்கியுள்ளார். இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. இந்நிலையில், உப்பு கப்புரம்பு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளனர் .

Share this story