கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

கார்த்தி நடிக்கும் 26-வது திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி, ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமாக ஜப்பான் உருவாகி வருகிறது. ராஜூ முருகன் இயக்கும் இப்படத்தில், அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். 

கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

இதைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 26-வது திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது. தற்போது, இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story