கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள்... ரகு தாத்தா படக்குழு கொடுத்த பரிசு...

கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள்... ரகு தாத்தா படக்குழு கொடுத்த பரிசு...

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரகு தாத்தா திரைப்படத்தில் அவரது முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த படத்தை ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள்... ரகு தாத்தா படக்குழு கொடுத்த பரிசு... 

இந்த படம் நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களம்தான். சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ‘பேமிலி மேன்’ படத்தின் எழுத்தாளர் சுமன்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷிற்கு பரிசாக படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷின் முதல் தோற்றத்தை படக்குழு வௌியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story