பேச்சுலர் பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்; அப்போ மாப்பிள்ளை யார் தெரியுமா?

photo

கேரள நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய கேர்ள்ஸ் நைட் பார்ட்டி புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் மிகச்சிறந்த நடிகை, அதற்கு உதாரணமாக இவர் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற ‘நடிகையர் திலகம்’ படத்தை சொல்லலாம்.

photo

இந்த நிலையில்  தற்பொழுது  கீர்த்தி தனது நண்பர்களுடன் நைட் பார்டி செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நடிகைகளான கல்யாணி பிரியதர்ஷன், பார்வதி, அதிதி பாலன், பிரக்யா மார்ட்டின், அனா பென், உள்ளிட்ட பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். கல்யாணி பிரியதர்ஷனின் அம்மா லிஸி பிரியதர்ஷனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதற்கு கேப்ஷனாக "A beautiful night with beautiful people."என போட்டுள்ளார்.

photo
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இத பாத்தா பேச்சிலர் பார்ட்டி போல தெரிகிறதே? அப்போ கீர்த்திக்கு கல்யாணமா? ‘ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஹன்சிகா,தமன்னா என அடுத்தடுத்து நடிகைகளின்  திருமண அறிவிப்பு வெளியாவதால் ரசிகர்கள் கீர்த்திக்கும் கல்யாணம்  கிட்டத்தட்ட உறுதி என பதிவிட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் விரைவில் மாப்பிள்ளை குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

photo

Share this story