‘ரகு தாத்தா’ படத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !

Raghuthatha

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரகு தாத்தா’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Raghuthatha

தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த படத்தை ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Raghuthatha

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  

Raghuthatha

 இந்த படம் நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களம்தான். சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ‘பேமிலி மேன்’ படத்தின் எழுத்தாளர் சுமன்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி இப்படத்தின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

Share this story