சாவித்ரியாக நடிக்க மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ்... என்ன காரணம் தெரியுமா ?
நடிகை கீர்த்தி சுரேஷ், முதலில் சாவித்ரியாக நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மறைந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான இந்த படத்தில் சாவித்ரியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இவருடன் இணைந்து நடிகர் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கீர்த்தி சுரேஷ் தான் முதலில் நடிகையர் திலகம் படத்தில் நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “இயக்குனர் நாக் அஸ்வின் முதலில் கதை சொல்லும்போது சாவித்ரி கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா? அவருடைய கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வர முடியுமா? என்று பயமாக இருந்தது. அதனால் முதலில் இந்த படத்தில் நடிக்க மறுத்தேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான பேபி ஜான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.