தாய்லாந்திற்கு வெக்கேஷன் சென்ற ‘கீர்த்தி சுரேஷ்’.

photo

மாமன்னன் படத்தைன் வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்  தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இனையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.  தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். இந்த நிலையில் அவரது நடிப்பில் கோலிவுட்டில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது. அடுத்து கண்ணிவெடி, சைரன், ரகுதாதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி தனது நண்பர்களுடன் தாய்லாந்தில் உள்ள கோ சாமுயி தீவிற்கு டூர் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு கோ சாமுயி தீவை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தியின் கியூட் ரியாக்ஷன், அவரது சிரிப்பு என வர்ணித்து வருகின்றனர்.

Share this story