கோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் 5 படங்கள்

கோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் 5 படங்கள்

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம்கோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் 5 படங்கள் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழில்  உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார். . நடப்பு ஆண்டில் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

 

ஜெயம்ரவியுடன் அவர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைரன். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வௌியாகிறது. அடுத்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீடா, கன்னி வெடி ஆகிய படங்கள் வெளியாகின்றன. அதேபோல தெறி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகிறார். 

Share this story