கீர்த்தி சுரேஷை விடாமல் பின்தொடர்ந்த ரசிகர்

கீர்த்தி சுரேஷை விடாமல் பின்தொடர்ந்த ரசிகர்

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.  கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தனது திரைவாழ்வை துவங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பிய அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த ‘ரஜினி முருகன்’ கீர்த்திக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேந்த கூட்டம், சாமி2, சர்கார் என அவரது வாழ்கையில் ஏறுமுகம்தான். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார். 

கீர்த்தி சுரேஷை விடாமல் பின்தொடர்ந்த ரசிகர்

இந்நிலையில், கீர்த்தி சுரேஷே இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் 234 நாட்களாக ரிப்ளை கொடுக்குமாறு பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு கீர்த்தியிடம் எந்த ரிப்ளையும் வரவில்லை. அண்மையில் அந்த பதிவை பார்த்த கீர்த்தி, ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு, பதில் கொடுத்துள்ளார்.

Share this story