கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஓடிடி வெளியீடு

ragu thatha

கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டது. இந்த படத்தை ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கினார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றன.

 

null


குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனத்தை பெற்றது.இப்படம் கடந்த ஆக. 15-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் Zee5 Tamil ஓடிடி தளத்தில் வரும் செப். 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம் இத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளது.

Share this story