‘லியோ’ படம் எனக்கு பிடிக்கவில்லை- கீர்த்தி சுரேஷின் தந்தை விமர்சனம்.
1703088363796

மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளரும், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “சமீபத்தில் லியோ படம் பார்த்தேன், எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை கிளைமேக்ஸில் ஒரு ஹீரோ 200 பேரை அடிக்கிறார். இதெல்லாம் சூப்பர் மேனால்தான் பண்ண முடியும். அது உங்களுக்கு பிடிச்சிருக்கு” என கூறியுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.