“நீங்க இல்லாமல் நான் இல்லை”- கீர்த்தி சுரேஷின் எமோஷனல் வீடியோ.

photo

முன்னணி கதாநாயகியாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் தான் 10ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நொகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தனது திரைவாழ்வை துவங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பிய அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த ‘ரஜினி முருகன்’ கீர்த்திக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேந்த கூட்டம், சாமி2, சர்கார் என அவரது வாழ்கையில் ஏறுமுகம்தான்.

குறிப்பாக கீர்த்தி நடித்த மகாநதி அவருக்கு தேசிய விருதை வாங்கிதந்தது. தொடந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையான கீர்த்தி இன்று தனது திரைவாழ்வில் 10ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதன்பொருட்டு வீடியோ வெளியிட்டு “தாய், தந்தை, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், எல்லாவர்க்கும் மேலாக ரசிகர்கள் நீங்க இல்லனா நான் இல்ல..” என நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share this story