நடிகர் கருணாஸ் மகன் இயக்கும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

karunas
நடிகர் கென் கருணாஸ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘காதலன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் தேவதர்சினி, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பார்வதா என்டர்டெயின்மென்ட் கருப்பையா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 நாட்களில் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கென் கருணாஸ் தனுஷின் இயக்கி நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story