ஆர்த்தி ரவி பதிவுக்கு கெனிஷா பிரான்சிஸ் பதிலடி..?

தனது கணவர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார். தனது பெயரையும் ரவி மோகன் என மாற்றினார். பாடகி கெனிஷாவுடன் காதல் என்ற வதந்திகளுக்கு இருவருமே மறுப்புத் தெரிவித்து வந்தனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷன் மகளின் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகச் சென்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்தது. ஜெயம் ரவி - கெனிஷா ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதையடுத்து ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தந்தை என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பொறுப்பு. சட்டமும் நானும் முடிவெடுக்கும் வரை எனது இன்ஸ்டாகிராம் பெயர் ஆர்த்தி ரவி என்றே இருக்கும். மரியாதைக்குரிய ஊடகங்களுக்கு சட்ட செயல்முறை முடியும் வரை என்னை முன்னாள் மனைவி என்று அழைப்பதைத் தவிர்க்கவும்.
இது ஒரு பழிவாங்கல் அல்ல. நான் அழமாட்டேன். நான் கத்தமாட்டேன். ஆனால் நான் நிமிர்ந்தே நிற்பேன். ஏனெனில் அது அவசியம். இன்னும் 'அப்பா' என அழைக்கும் அந்த இரண்டு பிள்ளைகளுக்காக. அவர்களுக்காக, நான் ஒருபோதும் பின்னடையமாட்டேன்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆர்த்தி ரவி பதிவுக்கு பதிலடி கொடுக்கும் கெனிஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டா கிராம் ஸ்டோரியில், “வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று ஆதரவான துணை கிடைப்பார்கள். அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.