கேரளாவில் மட்டும் இத்தனை திரைகளா? சாதனை படைக்க காத்திருக்கும் 'தி கோட்'
விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'தி கோட்' படத்தில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன. இப்படம் வருகிற 5-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.
All records are set to be broken 🔥#GOAT massive release across Kerala 💥#Thalapathy @actorvijay@vp_offl@archanakalpathi@thisisysr@Ags_production@aishkalpathi@GokulamMovies@GokulamGopalan@srkrishnamoorty@DreamBig_film_s#TheGreatestOfAllTime pic.twitter.com/Y2rmwvP6Do
— SreeGokulamMovies (@GokulamMovies) August 31, 2024

இந்தநிலையில் 'தி கோட்' திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாக உள்ளது. இப்படம் கேரளாவில் முதல் நாளில் 700 க்கும் அதிகமான திரைகளில் 4,000 க்கும் அதிகமான காட்சிகள் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. கேரளாவில் முதல் நாளிலேயே மிக அதிகமான திரைகளில் வெளியாகும் என்ற சாதனையை இப்படம் படைக்க உள்ளது. இது குறித்த பதிவினை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.