தமிழுக்கு வரும் ‘கேஜிஎப்’ ராக்கி பாய்... இயக்குனர் யார் தெரியுமா ?

yash

தமிழ் இயக்குனர் ஒருவரின் படத்தில் ‘கேஜிஎப்’ ஹீரோ யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னட சினிமாவில் நீண்ட நாட்களாக போராடி ஜெயித்தவர் நடிகர் யாஷ். பிரசாந்த நீல் இயக்கத்தில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதில் மிரட்டலான நடிப்பு, கம்பீரமான பார்வை, அழுத்தமான என அனைத்திலும் அசத்தி ஒரு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். அதன்பிறகு ‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் முதல் பாகத்தை விட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

yash

தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள அவர், அடுத்தடுத்த படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் பிரபல இயக்குனராக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. யாஷ்-க்கிற்காக மிரட்டலான கதையை மித்ரன் கூறியதாகவும், அது பிடித்துள்ளதால் இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பி.எஸ்.மித்ரன். முன்னணி இயக்குனர் ஒருவரிம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அவர், விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ, கார்த்தியை வைத்து ‘சர்தார்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story