சூர்யாவை சந்தித்த 'கேஜிஎப்' ஹீரோ... ரோலக்ஸ் - ராக்கி பாய் திடீர் சந்திப்பால் ரசிகர்கள் உற்சாகம் !

suriya

நடிகர் சூர்யாவை 'கேஜிஎஃப்' படத்தின் ஹீரோ யாஷ் சந்தித்து பேசியது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தென்னிந்தியாவில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான அவர், அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

suriya

வரலாற்று பின்னணி கொண்டு 3டியில் உருவாகும் இப்படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளது.  இந்த  படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. தற்போது பெங்களூரில் தங்கியிருக்கும் சூர்யா, தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட சூர்யா தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியானது.  

பெங்களூரில் இருக்கும் நடிகர் சூர்யாவை நடிகர் யாஷ் சந்தித்து பேசி உள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இதில் ராக்கி பாயாக ரசிகர்களை மிரட்டியிருந்தார். திரையுலகில் ரோலக்ஸ் மற்றும் ராக்கி என  இரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story