‘KH234’ பட பூஜை- மாஸ் கூட்டணியின் பக்காமாஸ் வீடியோ.
1698396536398

‘நாயகன்’ கூட்டணிக்கு பிறகு கிட்ட தட்ட 37 ஆண்டுகள் கழித்து கமல் ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகவுள்ள கமலின் 234வது படத்தின், பட பூஜை சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கமல், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிபதிவு செய்ய உள்ளார். தற்போது படத்தின் பூஜை சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 7ஆம் தேதி துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.