கிச்சா சுதீப்பை இயக்கும் தமிழ் இயக்குனர்... வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் புதியம் படம் !

kitcha sudeep

 கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் சுதீப். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோணா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

kitcha sudeep

தற்போது பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே பிசியாக நடித்து வருகிறார். கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் கிச்சா சுதீப், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடக தேர்தல் நிறைவுபெற்றவுடன் மூன்று திரைப்படங்களில் அடுத்தடுத்து கிச்சா சுதீப் நடிக்கவுள்ளார். 

அந்த வகையில் முன்னணி தமிழ் இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் கிச்சா சுதீப்பை சந்தித்த சேரன் கதை ஒன்றை கூறியுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துவிட உடனடியாக படத்தில் நடிக்கவும் ஒத்துக் கொண்டாராம். தமிழில் இயக்குனராகவும், நடிகராகவும் சேரன் இருந்து வருகிறார். அவரின் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் கன்னட ரீமேக்கில் கிச்சா சுதீப் நடித்திருந்தார். கடைசியாக ஜே கே என்ற நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களுக்கு பிறகு நீண்ட நாட்களாக படங்களை சேரன் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story