மீண்டும் விஜய்யுடன் இணையும் கிச்சா சுதீப்

மீண்டும் விஜய்யுடன் இணையும் கிச்சா சுதீப்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் சுதீப். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோணா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே பிசியாக நடித்து வருகிறார். கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் கிச்சா சுதீப், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடக தேர்தல் நிறைவுபெற்றவுடன் மூன்று திரைப்படங்களில் அடுத்தடுத்து கிச்சா சுதீப் நடிக்கவுள்ளார். 

மீண்டும் விஜய்யுடன் இணையும் கிச்சா சுதீப்

இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி்ல் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே புலி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.

Share this story