ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து "கிங்டம்"-படத்தின் விமர்சனம்

kingdom

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
கிங்டம் படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா காவல்துறையில் கான்ஸ்டபிலாக பணிபுரிந்து வருகிறார். தனது அதீத கோபத்தால் உயர் அதிகாரிகளை அடித்து கிட்டத்தட்ட சஸ்பெண்ட் ஆகும் வரை செல்கிறார். அந்த சமயத்தில் இவருக்கு அண்டர் கவர் ஆபரேஷனில் ஈடுபட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம் சிறு வயதில் தொலைந்து போன தனது அண்ணனை தேடி கண்டுபிடித்து விடலாம் என்பதால் அதனை ஏற்றுக்கொள்கிறார் விஜய் தேவரகொண்டா. இறுதியில் அண்டர்கவர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? தனது அண்ணனை கண்டுபிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே கிங்டம் படத்தின் கதை.
விஜய் தேவரகொண்டாவிற்கு அவரது நடிப்பு திறனை காட்டுவதற்கு ஒரு நல்ல படமாக கிங்டம் அமைந்துள்ளது. ஆக்சன் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் கைத்தட்டல்களை பெறுகிறார். விஜய் தேவரகொண்ட ரசிகர்களுக்கும், ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் கிங்டம் ஒரு விருந்தாக அமையும்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “கிங்டம்”. அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்தியதேவ் காஞ்சரனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Share this story