`கிங்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் HridayamLopala ப்ரோமோ ரிலீஸ்..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள `கிங்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் HridayamLopala பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
#HridayamLopala full song from May 2nd ❤️❤️❤️ #Kingdom
— Anirudh Ravichander (@anirudhofficial) April 30, 2025
First time with my man @TheDeverakonda and once again with dearest @gowtam19 @vamsi84 @SitharaEnts #BhagyashriBorse 🎉🎉🎉@anumitanadesan 🎤@KK_Lyricist 🖋️ pic.twitter.com/sWpaDow82o
கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளார். முழு பாடல் மே 2ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.