`கிங்டம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள `கிங்டம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
#Kingdom
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 14, 2025
July 04, 2025.
Will see you in the cinemas :) pic.twitter.com/uQUjpngygD
#Kingdom
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 14, 2025
July 04, 2025.
Will see you in the cinemas :) pic.twitter.com/uQUjpngygD
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் HridayamLopala வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் மே 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, `கிங்டம்' படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.