'கிங்ஸ்டன்' படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்...!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள படம் 'கிங்ஸ்டன்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ளனர். இது ஜி.வி. பிரகாஷ் இப்படத்தை தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ளார்.
Presenting the making of India's first SEA FANTASY ADVENTURE - #Kingston!
— Ramesh Bala (@rameshlaus) March 9, 2025
The film starring @gvprakash, in cinemas now 🌊
A film by @storyteller_kp.
Produced by @ZeeStudiosSouth and @ParallelUniPic.
pic.twitter.com/kCorzs17nb
இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது இந்தியாவின் முதல். ஸீ ஃபேண்டஸி ஜானர் படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடி கொண்டிருக்கிறது. . இந்நிலையில் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.