ஜிவி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன்... கிளாப் அடித்து தொடங்கினார் கமல்...
1696942070768

ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்திற்கு கிங்ஸ்டன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார் 100- வது திரைப்படத்தை விரைவில் எட்டயுள்ளார். அதேபோல், நடிகராக 25வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷூடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. கிங்ஸ்டன் என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், படப்பிடிப்பையும் தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.