'கிங்ஸ்டன்' படத்தின் 'டைட்டில் ட்ராக்' இன்று வெளியாகும் என அறிவிப்பு...!

ஜி.வி. பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' படத்தின் 'டைட்டில் ட்ராக்' இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். ஸீ ஃபேண்டஸி ஜானர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
#Kingston title track today 🔥❤️ pic.twitter.com/jLdQl9TViW
— G.V.Prakash Kumar (@gvprakash) March 1, 2025
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டிரெய்லரை யூடியூபில் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. இந்நிலையில், 'கிங்ஸ்டன்' படத்தின் 'டைட்டில் ட்ராக்' இன்று வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார்.