கிஷன் தாஸின் தருணம் பட டீசர் வெளியீடு

கிஷன் தாஸின் தருணம் பட  டீசர் வெளியீடு

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் திரைப்படம் தருணம். இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது. தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக கிஷன் தாஸ் நடிக்க, நடிகை ஸ்ருமிதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். , மூக்குத்தி அம்மன் மற்றும் மாறன் ஆகிய படங்களை அடுத்து இந்தப் படத்தில் ஸ்மிருதி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. 

தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் தற்போது தருணம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

Share this story