‘கிஸ் டே’... விக்னேஷ் சிவன் வெளியிட்ட வேற லெவல் புகைப்படம் !

கிஸ் டேவை முன்னிட்டு தனது நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
நட்சத்திர காதல் ஜோடியாக இருந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். அதன்பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்ட நயன்தாரா, அந்த குழந்தைகளின் முகம் தெரியாமல் அவ்வெவ்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று ‘கிஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவி நயன்தாரா நெற்றியில் விக்னேஷ் முத்தம் கொடுத்து ‘கிஸ் டே’ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’ உள்ளிட்ட தலைப்பு வைக்காத சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.