புஷ்பா 2 படத்தின் KISSIK பாடலின் வீடியோ வெளியானது
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
’புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'புஷ்பா' படத்தில் ’ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கு ’கிஸ்ஸிக்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Feel the heat, embrace the vibe! 🔥💃🏻#Kissik full video is out now! 🎶🎶https://t.co/3MvxzoXAEX
— T-Series (@TSeries) December 19, 2024
An Icon Star @alluarjun & Dancing Queen @sreeleela14 dance treat 💥💥
A Rockstar @Thisisdsp's Musical Flash⚡⚡#KissikStep#Pushpa2TheRuleOnDec5th@iamRashmika @aryasukku… pic.twitter.com/b6p7V5c6FC
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் மிக பிரபலமான 'கிஸ்ஸிக்' வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் ஸ்ரீலீலா மிகவும் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். பாடல் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.